15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆடிட்டர் ரமேஷ் படுகொலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வேதனை அளிக்கிறது: பாஜக

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வேதனை அளிப்பதாக

Updated On :19 செப்டம்பர் 2013, 1:27 pm

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது வேதனை அளிப்பதாக இருப்பதாக பாஜக மாநிலச் செயலர் சிவகாமி பரமசிவம் தெரிவித்துள்ளார்.

 பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பா.ஜ.க. தலைவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீஸாரின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கொலையாளிகளை நாடு முழுவதும் தேடி வருகின்றனர்.

 இந்த நிலையில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு வியாழக்கிழமையுடன் (செப்டம்பர் 19) 60-வது நாள் என்பதால், அவரது ஆன்மா சாந்தியடைய சேலம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜகணபதி திருக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

 பாஜகவினர், இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலர் சிவகாமி பரமசிவம் செய்தியாளர்களிடம் கூறியது:

 நாட்டையே உலுக்கிய இந்த கொலை நடந்து 2 மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் குறித்து போலீஸார் இதுவரையிலும் உறுதியான தகவலை வெளியிடாதது தங்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.

 இருப்பினும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸூக்கு இணையாக தமிழக காவல்துறையை கருதுவதால், காலம் தாழ்ந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

 அதேநேரம் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதே பாஜகவினருக்கும் பொதுமக்களுக்கும் போலீஸார் மீது நம்பிக்கை வரவழைப்பதாக இருக்கும். மேலும் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினர் கோரிக்கை மனு வழங்க அனுமதியும் நேரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.