15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சேலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப்

Updated On :12 செப்டம்பர் 2013, 10:46 am

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கடந்த 2005-ம் ஆண்டு முதல் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்துக்கு அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்டம்தோறும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மேலும் தாமதமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி 28.2.2011-க்கு பின்னரும் இன்று வரையிலும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 கட்டுமானத் தொழிலாளர்களில் 60 வயது நிறைவடைந்த நாள் முதல் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. விண்ணப்பித்து ஆறு மாதம் முதல் ஓராண்டு வரையிலும் தாமதமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு நிதியில்லை என்று தொடர்ந்து பதில் கூறப்படுகிறது.

 இந்த பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண முதல்வரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.முனுசாமி தலைமை தாங்கினார். சங்கச் தலைவர் ஓ.மாணிக்கம், துணைத் தலைவர் வி.சின்னப்பன், துணைச் செயலர் எம்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஆ.ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். ஏஐடியுசி அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ.விமலன், மாவட்டத் தலைவர் கே.ஏ.வேணுகோபால் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.