15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அக்டோபர் 5-ல் கோரிக்கை மாநாடு: ஆவின் ஊழியர் சங்கம் முடிவு

சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் கூட்டம் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிர்வாகி என்.சலீம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் எல்.சுந்தரராஜன், கூட்டுறவு ஊழியர் சம்மேளன

Updated On :4 செப்டம்பர் 2013, 11:06 am

வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்துவது என்று சேலத்தில் நடைபெற்ற ஆவின் ஊழியர் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புக் கூட்டம் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க நிர்வாகி என்.சலீம் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலர் எல்.சுந்தரராஜன், கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலச் செயலர் ஆ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஆவின் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சீரான விடுப்பு சலுகை வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை (2012) அமல்படுத்த வேண்டும். ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கும் முறையைக் கைவிட்டு நேரடியாக ஊழியர்களை நியமித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி கோரிக்கை மாநாடு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஆவின் ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் சி.மயில்வேலன், எஸ்.வேலுசாமி, இ.மணிவேல், பி.கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.