தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: இளைஞர்கள் 2 பேர் மீது கிராம மக்கள் புகார்

கரூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக இளைஞர்கள் 2 பேர் மீது கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.

Updated On :26 அக்டோபர் 2013, 10:46 am

கரூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக இளைஞர்கள் 2 பேர் மீது கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கரூர் மக்கள்பாதை வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி(30), செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த கோபால்(35)ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து கடந்த 12 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதை நம்பி ராயனூர், செல்லாண்டிப்பாளையம், தட்டங்காடு, ஆட்டயம்பரப்பு, கேசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இவர்களது சீட்டில் சேர்ந்தோம். இதில் 50 மாதம் சீட்டி கட்டினால் 51-வது மாதத்தில் ரூ.100க்கு ரூ.20 வட்டி போட்டு கொடுக்கப்படும் என கூறியிருந்தனர். இதே போல தீபாவளி பண்டிகைக்காக ரூ.100, 200, 300 என வாரச்சீட்டும் நடத்தினர். இதை தவிர ரூ.50,000 முதல் ரூ. 1 லட்சம், 2லட்சம் வரையிலான ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர்.

இதையடுத்து சீட்டு முதிர்வு அடைந்தவர்கள் அவர்களிடம் பணம் கேட்டோம். அதற்கு அவர்கள் கடந்த  வியாழக்கிழமை(24ம்தேதி)சீட்டுப்பணம் தரப்படும்,வீட்டிற்கு வாருங்கள் என கூறினர். இதையடுத்து வியாழக்கிழமை சென்று பார்த்த போது, அவர்களின் வீடுகளில் பூட்டியிருந்தன. அவர்கள் எங்களை ஏமாற்றி பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். சுமார் ரூ.2 கோடி வரை எங்களை ஏமாற்றியுள்ளனர். எனவே எங்களை ஏமாற்றி பண மோசடி செய்த இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்த அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.