/

கரிமருந்து திரி தயாரித்த 5 பேர் மீது வழக்கு பதிவு: 600 கட்டுக்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராம பகுதிகளில் அனுமதியின்றி காட்டுப் பகுதியில் கரிமருந்து திரி கட்டுக்களை தயார் செய்து வருவதாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:12 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி கரிமருந்து திரிகளை தயார் செய்ததாக 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராம பகுதிகளில் அனுமதியின்றி காட்டுப் பகுதியில் கரிமருந்து திரி கட்டுக்களை தயார் செய்து வருவதாக வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் வெண்ணிலா மற்றும் ஆமத்தூர் போலீஸார் ஆகியோர் வியாழக்கிழமை மாலை நேரத்தில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது, காட்டுப் பகுதியில் தென்னங்குடில் அமைத்து அங்கு பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கரிமருந்து திரிகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, போலீஸôர் வருவதைப் பார்த்து அங்கு பணியில் ஈடுபட்டிந்த தொழிலாளர்கள் தலைமறைவானார்கள்.

பின்னர் இது குறித்து கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்யும் போது குமரேசன் என்பவருக்கு சொந்த மான காட்டில் பரமசிவம், சுந்தரம், கேசவன், ரவிசங்கர் உள்ளிட்டோர் தயார் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 5 பேர் மீதும் ஆமத்தூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெண்ணிலா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் 600 கருந்திரி கட்டுக்களை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் எரித்து அழித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.