அதேபோல், வருடாந்திர வாடகை திட்டத்தில் உள்ள அனைத்து அகன்ற அலைவரிசை வாடிக்கையாளர்கள் ரூ.600 மற்றும் அதற்கும் மேல் மாத வாடகைத் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சலுகை விலையில் 3 ஜி டேட்டா கார்டு வழங்கப்படுகிறது. அதோடு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் விழாக்கால சலுகையாக இலவச சிம்கா்டு, டாப்-அப் ரூ.100 முதல் முழு டாக் வேல்யு மேலும் டாப்-அப் ரூ.6 ஆயிரத்திற்கு, கூடுதலாக ரூ.7200 டாக் வேல்யு கிடைக்கும். மேலும், இது தொடர்பாக நிறுவனத்தின் சேவைகள் மற்றும் கட்டணத் திட்டம் பற்றிய முழு விவரத்தை இணைய தள முகவரியான www.tamilnadu.bsnl.co.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல் பொது மேலாளர்(பொறுப்பு) ராஜம் தெரிவித்துள்ளார்.