ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆம்பூர் அருகே போலீஸார் சென்ற பைக் மீது லாரி மோதல் : போலீஸ் டிரைவர் சாவு

ஆம்பூர் அருகே போலீஸார் சென்ற பைக் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் டிரைவர் சாவு.  மற்றொரு போலீஸ் காயம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:58 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே போலீஸார் சென்ற பைக் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் டிரைவர் சாவு.  மற்றொரு போலீஸ் காயம்.

ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் டிரைவராக பணிபுரிபவர் சேகர் (53).  அதே காவல் நிலையத்தில் இருசக்கர ரோந்து வாகன போலீஸாராக பணிபுரிபவர் பிரபாகரன் (35).  இருவரும் பணி நிமித்தமாக மாதனூர் நோக்கி சென்றுள்ளனர். பிரபாகரன் பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார்.  தோட்டாளம் கிராமத்தருகே சென்றபோது தனியார் பார்சல் சர்வீஸ் வேன் அவர்கள் மீது மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற சேகர் பலத்த காயத்துடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  பிரபாகரன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் (44) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.