தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: பள்ளிப்பட்டு தாசில்தார் கைது

திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த கதம் நகரைச் சேர்ந்தவர் ராம்ஜி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாராம். இவருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்ய

Updated On :22 மே 2013, 12:39 pm

திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த கதம் நகரைச் சேர்ந்தவர் ராம்ஜி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாராம். இவருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை மதிப்பீடு செய்ய பள்ளிப்பட்டு தாசில்தாரை அணுகியுள்ளார். அப்போது, தாசில்தார் திலகம் நிலத்தை மதிப்பீடு செய்ய ரூ. 15 ஆயிரம் தர வேண்டும் என்றாராம். இதுகுறித்து ராம்ஜி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சிவசங்கரனிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப் படி, ரூ. 15 ஆயிரத்தை தாசில்தார் திலகத்திடம் ராம்ஜி அளித்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். பின்னர் மதியம் வரை அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்னர் சென்னை அம்பத்தூர் தாசில்தார் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.