15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மூணாங்கரடு கொடூர கொலை வழக்கில் நாளை தீர்ப்பு

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (எ) பழனிசாமி (35). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2011-ம் ஆண்டில் மூணாங்கரடு அருகேயுள்ள ஒன்பதாம்பாலி என்ற இடத்தில்

Updated On :18 ஜூன் 2013, 1:09 pm

சேலம் மூணாங்கரடு அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கொடூர கொலை வழக்கில் நாளை(ஜூன் 19) சேலம் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (எ) பழனிசாமி (35). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2011-ம் ஆண்டில் மூணாங்கரடு அருகேயுள்ள ஒன்பதாம்பாலி என்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த ஒரு கும்பல் வயிற்றைக் கிழித்து உடல் உறுப்புகளை அகற்றி கிணற்றில் வீசிச் சென்றது.

காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பல மணி நேரம் போராடி பழனியின் சடலத்தை மீட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மூணாங்கரடு பெருமாள், துரைசாமி, ரஞ்சித், ஸ்ரீதர், அருள்முருகன், கார்த்திக் உள்ளிட்ட 11 பேர்களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இரு தரப்பு விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு இந்த கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை(புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறி தள்ளிவைத்தார். பழனி கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது நண்பர் வெங்கடேசன் என்பவரையும் இதே கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, 11 நபர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தனியே நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.