டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பள்ளிகளில் 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்பதறகு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:03 pm

எஸ். பாண்டியன்

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்பதறகு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழக முழுவதும் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் மாதம் குறிப்பிட்ட நாளில் மனித வளமேம்பாட்டு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.500 வீதம், கல்வி ஆண்டு முடிவில் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வங்கி கணக்குகள் மூலம் விடுவிக்கப்பட இருக்கிறது. இத்தொகை 9-ம் வகுப்பு முதல், தொடர்ந்து 12-வது வகுப்பு வரையில் வழங்கப்படும்.

இத்தேர்வில் பங்கேற்பதற்கு மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். கடந்த ஆணடு அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 7-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 50 சதவீத மதி்ப்பெண்கள் பெற்று முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றும், அதோடு நிகழாண்டில் 8-வது படித்து வருகிறராகவும் இருக்க வேண்டும். மேலும்,  பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.எனவே தகுதியானவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் விண்ணப்பங்களை பெற்று முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து மாணவ, மாணவிகள் ஆக.2ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். அதையடுத்து, பள்ளிகளில் சேகரித்த விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.  

இத்தேர்வில், பங்கே  வேண்டும்.  கல்வித் உதவி தொகை   7-வது தேர்ச்சி பெற்று 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.