விருதுநகர் அருகே வாகன விபத்தில் காயம் அடைந்த பெண் மான் சாவு
விருதுநகர் அருகே மருளூத்து, வாய்ப்பூட்டன்பட்டி இனாம்ரெட்டியபட்டி, ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு மான்கள் தண்ணீர் அருந்துவதற்காக பம்ப்செட் தோட்டங்களுக்கு வந்து


விருதுநகர் அருகே வாகன விபத்தில் காயம் அடைந்த பெண் மானை நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது.
விருதுநகர் அருகே மருளூத்து, வாய்ப்பூட்டன்பட்டி இனாம்ரெட்டியபட்டி, ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு மான்கள் தண்ணீர் அருந்துவதற்காக பம்ப்செட் தோட்டங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலையில் 4 வழிச்சாலையோரம் உள்ள மருளூத்து கண்மாய் பகுதியிலிருந்து 4 வயதுடைய பெண்மான் ஒன்று சாலையைக் கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடலில் சிராய்ப்பு காயம் அடைந்தது. அதையடுத்து, தத்தி தடுமாறி சாலையோரம் உள்ள வாய்ப்பூட்டன்பட்டி பம்ப்செட் தோட்டத்திற்கு சென்றுள்ளது.
அப்பகுதி சாலையோரம் சுற்றித் திரிந்த நாய்கள் மானை தாக்குவதை கண்ட விவசாயிகள் விரைவாக வந்து நாய்களிடம் இருந்து மானை மீட்டு மருந்து தடவிய சிறிது நேரத்தில் உயிரிழந்தது. பின்னர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை பாதுகாப்பு வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைவாக வந்து பெண்மானை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...