டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திமுகவினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைப்பு

விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் வருகிற 31-ம் தேதி பங்கேற்க வேண்டும் என திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் கே.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:01 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியில் வருகிற 31-ம் தேதி பங்கேற்க வேண்டும் என திமுகவினருக்கு மாவட்ட செயலாளர் கே.கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திமுக கழகத்தின் மாநில நெசவாளர் அணித்தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையாரும் மாவட்ட கழகத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான வே.தங்கப்பாண்டியன் நினைவு நாள் நிகழ்ச்சி மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் 31-ம் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற் குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.