டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு முகாம் காலிபணியிடங்களை குறிப்பிடாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிய ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் அப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக ஒவ்வொரு பள்ளிக்கும் 9

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm

எஸ். பாண்டியன்

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு முகாமில் காலிப்பணியிடங்களை குறிப்பிடாததால் வெளியூர்களிலிருந்து வந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் அப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக ஒவ்வொரு பள்ளிக்கும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 5 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதற்கு ஒதுக்கப்பட்ட 45 முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு முகாம் இன்று விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்காக, சென்னை, சேலம், ஈரோடு, கும்பகோணம், வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட  முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆனால், காலிப்பணியிடம் வரலாறு-2க்கு மட்டும் தகவல் பலகையில் குறிப்பிட்டிருந்தனர். ஏற்கனவே கடந்த 21-ம் தேதி மாவட்டத்திற்குள் நடந்த கலந்தாய்வு முகாமிலும் இதே பிரச்னை நடந்துள்ளது. அதேபோல், இரண்டு இடங்கள் என குறிப்பிட்டதை அடுத்து தகுதியில்லாததால் அனைத்து ஆசிரியர்களும் திரும்பச் சென்றனர்.

இது தொடர்பாக கும்பகோணத்தில் இருந்து வந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இதுபோன்று நடைபெறும் கலந்தாய்வு முகாமில் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தையும் குறிப்பிடுவதே இல்லை. இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டால் கல்வி துறையின் உத்தரவுபடி நடக்கிறது என்கிறார்கள். குறைந்த அளவு காலிப்பணியிடங்கள் இருப்பது குறித்து முன் கூட்டியே தெரிவித்திருந்தால் வெளிமாவட்டங்களில் வந்திருக்கவே மாட்டோம். இதில், பங்கேற்பதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு அலைந்து திரிய வேண்டிய அவசியமும் இல்லை. இனிமேல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு முகாம் வெளிப்படை தன்மையாக நடைபெற வேண்டும். அதற்கு முதலில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும், இரண்டாவது மாவட்டத்திற்குள் நடத்துவதற்கும் பள்ளிக் கல்வி துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.