டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.71 ஆயிரம் மோசடி

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமுத்து(45). இதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(46) என்பவரின் நிலத்தை வாங்கியுள்ளார். இதற்காக, ரூ.50 ஆயிரம் முன்பணமாக கொடுத்துள்ளார். அதையடுத்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.71 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுமுத்து(45). இதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி(46) என்பவரின் நிலத்தை வாங்கியுள்ளார். இதற்காக, ரூ.50 ஆயிரம் முன்பணமாக கொடுத்துள்ளார். அதையடுத்து, பத்திர பதிவு அலுவலகத்தில் ஒப்பந்த பத்திரம் தயார் செய்து கொடுத்ததோடு, குறிப்பிட்ட நாளில் முழுத்தொகையும் கொடுத்து கிரையம் செய்து தருவதாகவும் உறுதி கூறியுள்ளார். அப்போது, பதிவுக்கு அழைக்கும் போது உடனே ரூ.20 ஆயிரம் கேட்ட நிலையில் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பதிவு செய்வதற்கு வராமலும், பணத்தை திரும்ப கேட்டாலும் தாமதம் செய்ததோடு, ஏமாற்றியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அழகுமுத்து புகார் செய்தார். அதன் பேரில் ரூ.71 ஆயிரம் மோசடி செய்த அழகர்சாமி மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.