மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ஈரோட்டில் களைகட்டியது மாட்டுப் பொங்கல்

ஈரோடு மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் செவ்வாய்க்கிழமை களைகட்டியது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:03 am

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் செவ்வாய்க்கிழமை களைகட்டியது.

விவசாயிகள் தங்களது மாடுகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச்சென்று குளிப்பாட்டினர். ஈரோடு காவிரி கரையில் நூற்றுக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டு குளிப்பாட்டப்பட்டன. பின்னர்  அவற்றின் கொம்புகளில் வண்ண வண்ண நிறங்களில் வண்ணம் பூசினர்.

அதேபோல காலிங்கராயன் பாசன பகுதிகள் மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளிலும் ஏராளமான மாடுகளை விவசாயிகள் குளிப்பாட்டினர்.

அதைத் தொடர்ந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து அதற்கு பூஜை செய்தனர். ஒரு சில இடங்களில் விவசாயிகள் தங்களது வீடுகளில் உள்ள குதிரைககளையும் குளிப்பாட்டி மாலை அணிவித்து பூஜை செய்தனர். ஈரோடு நகர பகுதிகளைவிட, ஊரக பகுதிகளில் மாட்டுப்பொங்கல் களைகட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.