கடலூரில் சுனாமி 9-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. உறவுகளை இழந்தோர் கடலுக்குள் கால் நனைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமிப் பேரலைகள் தாக்கின. இதில் கடலூர் மாவட்டத்தில் 617 பேர் இறந்தனர். 40 பேரைக் காணவில்லை. கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் சிலரும் ஆழிப் பேரலைக்குப் பலியாயினர்.
மீனவர்கள், மீன்பிடித் தொழில் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். வீடுகள் உடைந்து சேதம் அடைந்தன. படகுகள் வலைகள் காணாமல் போயின.
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத் தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, முடசலோடை, எம்ஜிஆர் திட்டு உள்ளிட்ட 45 மீனவர் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கடலூர் நகரப் பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 3 கி.மீ தூரம் வரை கடல் நீர் புகுந்தது.
இந்த நாளை நினைவு கூறும் வகையில், உறவுகளை இழந்தோர், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடலூர் தேவனாம்பட்டணத்தில் அஞ்சலி செலுத்தினர். சுனாமி சோகத்தை அனுசரிக்கும் வகையில் மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை. பல படகுகளில் மீனவர்கள் கறுப்பு கொடியேற்றி வைத்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

