சேலத்தில் போலீஸ் அதிகாரி வீட்டுக்கு அசுத்தமான குடிநீர்வினியோகம் செய்த போலி குடிநீர் தொழிற்சாலைக்கு சீல்
சேலம் நெத்திமேடு பகுதியில் இயங்கிய போலி மினரல் வாட்டர் தொழிற்சாலைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீட்டுக்கு புழுக்களுடன் கூடிய அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.








