வெவ்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை உடைத்து 11 சவரன் நகை திருட்டு
விருதுநகர் அருகே சங்கராலிங்காபுரம் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மனைவி வீரலட்சுமி(41). இவர் புதன்கிழமை மாலையில் வீட்டை பூட்டி விட்டு தனது மகள் பிரசவத்திற்காக விருதுநகர்


விருதுநகரில் வெவ்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 11 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே சங்கராலிங்காபுரம் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மனைவி வீரலட்சுமி(41). இவர் புதன்கிழமை மாலையில் வீட்டை பூட்டி விட்டு தனது மகள் பிரசவத்திற்காக விருதுநகர் மருத்துவமனையில் இரவு முழுவதும் இருந்துள்ளார். அதையடுத்து, இன்று காலையில் வீட்டிற்கு சென்று திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று வந்தாராம்.பின்னர் திரும்பி வீட்டிற்கு நுழையும் போது அடையாளம் தெரியாத நபர் எதிரே வந்த என்னை கையை பிடித்து தள்ளி விட்டு தப்பியோடினாராம். பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் இருந்த 4 சவரன் நகைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து வீரலட்சுமி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
மற்றொரு திருட்டுச் சம்பவம்:
விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த கெங்கையா என்ற சௌந்தராஜின் மனைவி சாந்தி(24). இவர் வியாழக்கிழமை காலையில் சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கதவை அடைத்து விட்டு பேசிக் கொண்டிருப்பதற்காக சென்றாராம். பின்னர் திரும்பி வந்து பார்க்கையில் கதவு திறந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம்.
அதையடுத்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் திறக்கப்பட்டு அதற்குள் இருந்த 7 சவரன் நகை மற்றும் இரண்டு ஜோடி வெள்ளிக் கொலுசுகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிந்தனர். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...