இந்நிலையில் ஒவ்வொரு நினைவு நாள் வரும் போதும் அறிவிப்பு வெளியாகும் என சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதேபோல், கர்நாடாகவில் மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு 6 மாதங்களில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து நடிகர்களை கொண்டாடி வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் வருங்கால சந்ததியினர் அறி்ந்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைப்பதற்கு முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடு்க்க வேண்டும் என சிவாஜி சமூக நலப்பேரவையின் மாநிலத் தலைவர் கே.சந்திரசேகரன் தெரிவித்தார். அப்போது உடன் வடசென்னை மாவட்ட சமூக நலப்பேரவையின் மாவட்ட தலைவர் இ.சங்குராஜன், பொதுச்செயலாளர் ஜே.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சாத்தூர் நகர செயலாளர் டி.எஸ்.அய்யப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.