டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கிராமங்களில் முழு சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும்: ஆட்சியர்

இம்மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் 67-வது சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.  விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆமத்தூர் ஊராட்சியில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:14 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முழு சுகாதார திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

இம்மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளிலும் 67-வது சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.  விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆமத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மூக்கையா முன்னிலை வகித்தார். ஆமத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி வரவேற்றார். இதில், சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கலந்து கொண்டு குறைகளை கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.அப்போது, கிராம மக்கள் இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை சீரமைக்கவும், பள்ளி வளாகத்தில் கழிப்பறை வளாகம் இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், கண்மாயை தூர்வாரமல் போதிய அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையிருந்து வருவதாகவும், சத்துணவு மையம் கட்டடத்தையும் மராத்து பணிகள் செய்யவும், கிராம தெருக்களில் சிமெண்ட சாலை அமைக்கவும் வேண்டி ஆட்சியரிடம் கோரிக்கையாக வைத்தனர்.

இதையடுத்து ஆட்சியர் பேசுகையில், கிராமங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  இக்கிராமத்தில் அரசின் பசுமை குடியிருப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், பொது விநியோகத்திட்ட முறையும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களால் சமூக தணிக்கையும் செய்யப்படுகிறது.மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலம் ஒவ்வொரு கிராமத்தையும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திறந்தவெளியில்  இயற்கை உபாதை செய்வதால் கிராம மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதை தவிர்க்கும் வகையில் சுகாதார கிராமமாக மாற்றும் வகையில் தனி நபர் கழிப்பறை வளாகம் அமைக்க பொதுமக்கள் முன்வரவேண்டும். உங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் மனுவாக தெரிவித்தும், அவர்களின் துணையோடு அதிகாரிகளை அணுகி பெற வேண்டும்.  தற்போது இந்தக் கூட்டத்தில் உங்கள் கிராமத்திற்கு தேவையான திட்டங்களை குறித்து தெரிவித்தீர்கள். அதிலும் முக்கியமான கோரிக்கையாக பள்ளி சீராமைப்பு மற்றும் கண்மாய் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே செய்து கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் மா.பிரபாகர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சாமிநாதன், தொடக்க கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, உதவி இயக்குநர் பீபிஜான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாரதிசுப்புராம், வட்டார ஊராட்சி உறுப்பினர் சி.லீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.