டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 5 சரவன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:13 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 5 சரவன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகரில் உள்ள கணேஷ்நகரைச் சேர்ந்தவர் திருப்பதி(45). இவர் கடந்த 13-ம் தேதி அருகில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றாராம். அங்கிருந்து புதன்கிழமை திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டை திறந்த பார்க்கையில் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே நுழைந்து பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனே விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரி்ல் வழக்கு பதிவு செய்து பின்புறமாக கதவை உடைத்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.