டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு சி.ஐ.டி.யு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.விஸ்வரூபகேசவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பொதுவிநியோக

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:13 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பொய்வழக்கு போடும் உணவு தடுப்பு காவல் ஆய்வாளரை கண்டித்து கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவு சி.ஐ.டி.யு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.விஸ்வரூபகேசவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பொதுவிநியோக ஊழியர் சங்த்தின் மாவட்ட செயலாளர் கே.தொந்தியப்பன், எஸ்.சி., எஸ்.டி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராமர் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விருதுநகர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் காவல் ஆய்வாளர் கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து வருவது, ஊழியர்கள் பாதிப்படையும் வகையில் நடவடிக்கை எடுப்பது மற்றும் பொய்வழக்குகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநில உதவித்தலைவர் ஆர்.அருணாசல பெருமாள், தமிழ்நாடு வாணிபக்கழக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகவேலு, மாநில தலைவர் டி.பால்ராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.