டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஓரிரு நாளில் தலைவா ரிலீஸ்: விஜய்

தலைவா படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:14 pm

ஜி. அசோக்

தலைவா படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகர் விஜய் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

தலைவா படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்த நேரத்தில் தலைவா படம் வெளியானால் பிரச்னை வரும் எனக் கருதியதால், படம் வெளியாகவில்லை. இதைக் கேட்டு படக்குழுவினர் உட்பட அனைவரும் ஆடிப்போய் உள்ளனர்.படம் வெளியாகாததால், அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம். இப்பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்து விரைவில் சந்தித்து பேசுவோம் என நம்புகிறோம்.

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற, முதல்வர் ஜெயலலிதா உழைத்து வருகிறார். அதேபோல் தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு படம் வெளியாக உதவி செய்வார்.கடைசி நேரத்தில் கேரளா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் படம் வெளியாவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் திருட்டு சி.டி., புழக்கத்தில் உள்ளது.இதை தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது. பெரும் உழைப்பில் தலைவா படம் உருவாகி இருக்கிறது. சில ரூபாயில் திருட்டு சி.டி., வெளியாவது சட்டப்படி குற்றமாகும். இது தர்மத்தின்படியும் தவறாகும்.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் திருட்டு சி.டி., விற்றவர்களை ரசிகர்கள் பிடித்து உள்ளனர். திருட்டு சி.டி.,யை தடுப்பதற்கு உதவி புரிந்த காவல்துறையினருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.தலைவா படம் எல்லோரும் ரசிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. ஓரிரு நாளில் படம் வெளியாகும்.இவ்வாறு விஜய் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.