டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலைகளில் உயர்நிலைக்குழுவினர் ஆய்வு: 18 ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலைகளில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு செய்ததில் விதிமுறை மீறியதாக இதுவரையில் 18 ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:13 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலைகளில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு செய்ததில் விதிமுறை மீறியதாக இதுவரையில் 18 ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆக.5-ம் தேதி முதல் தொடர்ந்து தனியார் பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல் உள்ளதா என்பது குறித்தும், விடுமுறை நாளில் செயல்படுகிறதா, அனுமதி இல்லாமல் வீடுகளிலும் தோட்டப்பகுதிகளிலும் நடைபெறுகிறதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அதன் அடிப்படையில் விருதுநகர், சிவகாசி பகுதிகளில் குறிப்பிட்ட நாளில் இருந்து ஆக.12-ம் தேதி வரையில் 18 ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கிராமங்களில் தீவிரமாக ஆய்வு செய்ததில் எவ்வித அனுமதியின்றியும் வீடுகளில் தயாரித்த 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும், இதற்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து, அதில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், விருதுநகர் பகுதியில் உள்ள வி.முத்துலிங்காபுரம், மத்திசேணை, முண்டலாபுரம், காரிசேரி, சோரம்பட்டி, தியாகராஜபுரம், வெம்பக்கோட்டை, வெறறியிலையூரனி, விஜயகரிசல்குளம், வச்சக்காரப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, ஜமீன்சல்வார்பட்டி, ஓண்டிப்புலிநாயக்கனூர், சங்கரலிங்காபுரம், வெள்ளூர் ஆகிய கிராமங்களில் எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் வீடுகளிலும், தோட்டப்பகுதிகளிலும் பட்டாசுகள் தயார் செய்கிறார்களா என்பது குறித்து உயர்நிலைக் குழுவினர் தீவிர ஆய்வு செய்யப்பட இருப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.