இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் வைத்திருந்த பணம், நகை ஆகியவைகளை சின்னகுருசாமி தேடினாராம். அப்போது, காணாதது குறித்து மகளிடம் கேட்ட போது, நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். எனவே தனது மகளை ஏமாற்றி நகை மற்றும் ரொக்கத்தை மோசடி செய்த இளம்பெண் குறித்து சின்னகுருசாமி அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையில் புகார் செய்தார். அதன் பேரில் ஜோசியம் பெண் மீது வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது போடிநாயக்கனூர் நாயக்கர் தெருவைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி ராஜேஸ்வரி(25) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து மோசடி செய்தது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.