டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: பாதுகாப்பு பணியில் 700 போலீஸார்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு 700 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், திருக்கோயில் நுழைவு வாயில் முன்பு வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:13 pm

எஸ். பாண்டியன்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு 700 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், திருக்கோயில் நுழைவு வாயில் முன்பு வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே வழிபாட்டுக்குச் செல்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 16-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதன் உச்சக்கட்ட திருவிழா வருகிற 15,16 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. அதனால், இந்நாள்களில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைப்பாற்று பகுதியிலும், பனைத்தோப்பு பகுதிகளிலும் இரண்டு நாள்கள் தங்கியிருந்து செல்வார்கள். அதனால், பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். எனவே இப்பகுதியில் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில்   தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 டி.எஸ்.பிக்கள், 40 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 700 போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், இதுபோன்ற கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் பெண்களிடம் பிக்பாக்கெட் மற்றும் நகை பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். இவைகளை தடுப்பதற்கு தனிப்பிரிவு காவலர்களைக் கொண்ட 7 குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 6 பேர் வரையில் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருவிழாக் கூட்டத்தின் நடவடிக்கை அனைத்தையும் கண்காணிக்கும் வகையில் குறிப்பிட்ட மையப் பகுதியில் கேமராக்கள் பொறுத்தப்படும்.இதன் மூலம் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் கண்காணித்து பிரச்னைகளை தீர்ப்பதற்கும், குற்றவாளிகளை கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோயில் வாசலில் பக்தர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் மெட்டல் டோர் வைத்து வெடிகுண்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வழிபாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட இருப்பதாவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.