டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 7 பேர் கைது

விருதுநகர் அருகே உள்ள சங்கராலிங்காபுரம் மற்றும் ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை வீட்டுக்கு பின்புறமும்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:13 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் அனுமதியின்றி பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயாரித்ததாக 7 பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள சங்கராலிங்காபுரம் மற்றும் ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை வீட்டுக்கு பின்புறமும், தோட்டங்களில் வைத்து தயார் செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கட் தலைமையில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் வீடுகளிலும், தோட்டப்பகுதிகளிலும் வைத்து கருந்திரிகளை தயாரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (44),சசிக்குமார் (30),பாண்டி (35), குமார் (40) மற்றும் முருகன்(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 80 குரோஸ்கள் வரையில் கருந்திரி கட்டுக்களையும் ஆமத்தூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சங்கராலிங்காபுரம், சேடப்பட்டி பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் விவேக் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, சேடபட்டியைச் சேர்ந்த முனியசாமி(40), சங்கராலிங்காபுரத்தைச்  சதாசிவம்(35) ஆகியோர் அனுமதியின்றி கருந்திரி கட்டுக்களை தயார் செய்து வருவது தெரியவந்தது. இது தொடர்பாக உடனே வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 20 குரோஸ் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் போலீஸார் பறிமுதல் செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.