டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மழையை எதிர்பார்த்து விதைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள்

இம்மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் மொத்தம் 1.50 ஹெக்டேர் விவசாயம்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:11 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் மொத்தம் 1.50 ஹெக்டேர் விவசாயம் விளைநிலங்கள் உள்ளது. தற்போது, கிணற்றுப் பாசனத்திலும், மானாவாரியிலும் 1.20 ஹெக்டேர் பரப்பளவு வரையில் பயிர்  செய்யப்பட்டு வருகிறது. அதிலும், கடந்த ஓராண்டாக போதுமான மழை பெய்யாத நிலையில் வறட்சியால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆடிப்பட்டத்தில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள தயராகவே உள்ளனர். தானியப் பயிர்களின் சாகுபடி உற்பத்தி ஆடிப்பட்டத்தில் தான் அமோகமாக இருக்கும். அதனால் இப்பணியை மேற்கொள்வதற்காக விவசாயிகள் மழையை எதிர் பார்த்துள்ளனர்.

இந்த ஆடிப்பட்டத்த்தில் தான் சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, மொச்சை, பாசிப்பயறு, பருத்தி, துவரை உள்ளிட்ட பல்வேறு தானியங்கள் மற்றும் கிணற்றுப்பாசனத்தில் காய்கறிகள், கால விவசாயம் பயிரிடுவதற்கும் ஏற்ற சூழ்நிலையாக இருக்கிறது. அதனால், இப்பட்டத்தை விவசாயிகள் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக விளைநிலங்களை பண்படுத்தியும், உழவுப் பணி செய்து தயார் நிலையில் இருக்கிறது. மேலும், நிலங்களில் உரத்தன்மையாக அதிகமாக இருப்பதற்கும், சாகுபடியை பெருக்கும் வகையிலும் இயற்கை உரங்களுக்காக ஆடு மற்றும் மாடுகள் அடங்கிய கிடை அமர்த்துதல், கண்மாய்களில் கரம்பை மண் அடித்தல், காட்டுப் பகுதிகளில் மழை நீர் தேங்கும் அளவிற்கு வரப்புகளில் மண் அனைத்தல், குப்பைகள் சிதறி உழவு செய்யும் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயமுருகன் கூறியதாவது: விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு  விளைநிலங்களை தயார்படுத்தி மழைக்காக எதிர்பார்த்துள்ளனர். இதுவரையில் பரவலான மழை பெய்யாத நிலையில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலே இருக்கிறது. இதேபோல், கடந்த ஆண்டிலும் குறிப்பிட்ட நேரத்தில் மழை பெய்யாத நிலையில் தாமதமாகவே விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.