எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சேலம் அருகே காந்தி சிலை உடைப்பு: போலீஸார் விசாரணை

கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சுமார் 3 அடி உயர காந்தி சிலை உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு காந்தி ஜயந்தி அன்று அப்போதைய சேலம் 2-வது தொகுதி எம்.எல்.ஏ. மு.கார்த்தியால் திறக்கப்பட்ட

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:33 am

க. தங்கராஜா

சேலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டியில் காந்தி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கன்னங்குறிச்சி போலீஸார் தேடி வருகின்றனர்.

கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சுமார் 3 அடி உயர காந்தி சிலை உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு காந்தி ஜயந்தி அன்று அப்போதைய சேலம் 2-வது தொகுதி எம்.எல்.ஏ. மு.கார்த்தியால் திறக்கப்பட்ட இந்த சிலையை, ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

ஊராட்சி அலுவலகம் எதிரேயுள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் திங்கள்கிழமை இரவு ஏராளமான இளைஞர்கள் அந்த பகுதியில் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற சிலர் காந்தி சிலையின் இரண்டு கைகளும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். இது குறித்த தகவல் பரவியதும் காந்தி சிலை அருகில் ஊர் பொதுமக்கள் திரண்டனர்.

இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் பாபு, கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாநகர போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமாரன், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்தனர்.சேதமடைந்த காந்தி சிலையின் கைகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்தது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கன்னங்குறிச்சி போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.