15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆபிரஹாம் (24). இவர் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்ததாகக்

Updated On :27 ஏப்ரல் 2013, 1:05 pm

சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஆபிரஹாம் (24). இவர் கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த மார்ச் 19-ம் தேதி சாராய கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஆபிரஹாம், இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து சாராய கடத்தல், வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஆபிரஹாமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் பரிந்துரைத்தார்.

இதையடுத்து சாராய வியாபாரி ஆபிரஹாமை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள ஆபிரஹாமுக்கு உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.