/

சிதம்பரத்தில் பேருந்து நிலைய வியாபாரிகள் கடை அடைப்பு

சிதம்பரம் தந்தை பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து  இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:38 pm

ஜி. சுந்தர் ராஜன்

சிதம்பரம் தந்தை பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகள் காவல்துறையை கண்டித்து  இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழக அரசு சுற்றுலா பகுதியாக சிதம்பரம் நகரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் அருகே அரசு காமராஜர் மருத்துவமனை உள்ளது. தினந்தோறும் இரவு, பகலாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை திறக்கக்கூடாது என காவல் துறையினர் அறிவித்துள்ளதை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இரவு 11 மணிக்கு மேல் சென்னை, திருச்சி, சேலம் மார்க்கமாக சிதம்பரம் பஸ்நிலையத்திலிருந்து சுமார் 96 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைகளை மூடச் சொல்வதால் பஸ் நிலையம் இருள் சூழ்ந்தும், சுற்றுலா பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் டீ, காபி கூட குடிக்க முடியாமல் அவதியுறும் நிலை உள்ளது. அண்மையில் காவல்துறையினர் வியாபாரிகளை தகாத வார்த்தையால் திட்டி கடைகளில் இருந்த மின்விளக்குகளை மற்றும் கடைகளில் இருந்த பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.