ஈரோடில் டெங்குவுக்கு சிறுவன் பலி?
ஈரோட்டில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ஒருவன் பலியானதாகக் கூறப்படுகிறது.


ஈரோட்டில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ஒருவன் பலியானதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு சென்னிமலை சாலையைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மகன் சையித் மொதீன்(13) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
திங்கள் கிழமை திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவரை ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சென்று சேர்த்தனர்.
இந்நிலையில் புதன் கிழமை அவருக்கு சிகிச்சை எதுவும் பலனளிக்காத நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் வீட்டுக்குச் செல்லும் வழியில் சையித் மொதீன் உயிரிழந்தார்.
இவர் ஏற்கெனவே டெங்கு அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறினர். இது குறித்து சூரம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...