டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தக்க ஆதாரங்களுடனே கிரானைட் வழக்குகள் பதிவு : காவல் கண்காணிப்பாளர்

கிரானைட் குவாரி குறித்து தக்க ஆதாரங்களுடன் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளர் ...

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:35 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஆக., 21 : மதுரையில் கிரானைட் குவாரிகளில நடந்த முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 5 வழக்குகள் பிஆர்பி நிறுவனம் தொடர்பானது. இதுவரை பிஆர்பி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி மற்றும தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன உரிமையாளர் பாலசுப்ரமணியம் உட்பட  38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் வி. பாலகிருஷ்ணன் எமது செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கிரானைட் குவாரி குறித்து தக்க ஆதாரங்களுடன் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி கைது விவகாரத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகே போலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விதிமுறைகளின் படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல புதிய புகார்களும் அவர் மீது வந்துள்ளன. அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்வோம் என்று வி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.