டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஈழம் என்ற வார்த்தைக்கு தடை : விடுதலை சிறுத்தைகள் கண்டனம்

மதுரை, ஆக., 10 : டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ச

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:26 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஆக., 10 : டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இந்தியா சுதந்திரப்போராட்ட காலத்தில் எமர்ஜென்சி பீரியட் எனப்படும் அவசர காலத்தில் இருந்த அடக்குமுறையைப் போல இந்த கடிதத்தின் தாக்கம் உள்ளது. டெசோ என்பது தமழீழ ஆதரவைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈழம என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியல்ல. ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.