மதுரையில் குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது: வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்
மதுரை ரயில் நிலைய அலுவலகத்துக்கு வந்த மர்ம அழைப்பில் மதுரை ரயில் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு குண்டு வெடிக்கும் என ...


மதுரை, ஆக. 4: மதுரை தெற்கு மாசி வீதி மற்றும் தெற்கு ஆவணி மூல வீதிக்கு இடைப்பட்ட தெற்கு கிருஷ்ணன் கோவில் பகுதியில் நகைப் பட்டறை வைத்திருப்பவர் உமர் ஃபாரூக். நேற்று இரவு இவரது நகைப் பட்டறைக்கு ஒரு பார்சல் வந்ததாம். கொரியர் அலுவலகத்தில் இருந்து வருவதாகச் சொல்லி ஒரு சிறுவன் இந்தப் பார்சலைக் கொடுத்துச் சென்றாராம்.
அதை அப்படியே வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்ட உமர், இன்று காலை அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் பேட்டரி, டைமர், சிறிதளவு வெடி பொருள் ஆகியவை இருப்பதைக் கண்டார். இதனால் அச்சம் அடைந்த உமர், இது குறித்து மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதை அடுத்து அங்கே விரைந்து வந்த போலீஸார், மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பொருள்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடனடியாக அந்த வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மதுரையில் வசிக்கும் சௌராஷ்டி மக்களின் மாநாடு ஒன்று இன்று நடைபெறுகிறது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிகுண்டு வைக்க ஏதாவது திட்டமிடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க,வின் தாமரை சங்கமம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க, தலைவர் எல்.கே. அத்வானி
வந்திருந்தபோது, மதுரை ராமர் கோவில் அருகே சைக்கிள் குண்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், இன்று மதுரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் ஒன்று வந்துள்ளது. மதுரை ரயில் நிலைய அலுவலகத்துக்கு வந்த மர்ம அழைப்பில் மதுரை ரயில் நிலையத்தில் இன்று மாலை 5 மணிக்கு குண்டு வெடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப் பட்டுள்ளது.
மதுரையில் அண்மையில் நகரப் பேருந்துகளில் டிபன் பாக்ஸ்களில் வெடிகுண்டுகள் இருந்தன. மேலும் மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு மதுரை நகரில் வெடிபொருள்கள் சரளமாக உலாவருவதும், அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வருவதும், மதுரை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அத்வானி வருகையின் போது வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் உமருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும், இந்தச் சம்பவத்தில் அவர் கூறுவது முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால், போலீசாரையும் மக்களையும் திசை திருப்புவதற்காக அவரேகூட நாடகமாடலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதை அடுத்து, அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...