மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்வதால், கோவை மற்றும் சுற்றுப் பகுதிகள் தொடங்கி திருப்பூர் வரை கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தாழ்வான திருப்பூரின் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் வீடுகளின் மாடிப் பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். வீடுகள் பல இடிந்துள்ளன. இரவு முதலே மீட்புக் குழுவினர், மாநகராட்சிப் பணியாளர்கள் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்து உடனடி தகவல் தெரியவரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.