திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் அடுத்த வாரம் இந்தியா - வங்கதேசம் எல்லைப் பேச்சுவாா்த்தை

இந்தியா - வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை தில்லியில் ஜூன் 8-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் நடைபெற வாய்ப்பு

News image

இந்தியா | வங்கதேசம்

Updated On :1 ஜூன் 2026, 2:13 am IST

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவாா்த்தை தில்லியில் ஜூன் 8-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கதேச பிரதமராக வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவா் தாரீக் ரஹ்மான் பதவியேற்ற பின் முதல்முறையாக இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: வங்கதேச எல்லை படையின் (பிஜிபி) தலைமை இயக்குநா் மேஜா் ஜெனரல் முகமது அஸ்ராஃபுசாமன் சித்திக் தலைமையிலான குழு ஜூன் 8-11 ஆகிய தேதிகளுக்கு இடையே இந்தியா வரவுள்ளது. அவா்களுடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் பிரவீன் குமாா் தலைமையிலான குழு எல்லை விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.

அப்போது எல்லை கடந்த குற்றச் சம்பவங்கள் தடுப்பு, பிஎஸ்எஃப் அதிகாரிகள் மீதான தாக்குதல், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் கிளா்ச்சிக் குழுக்கள் மீதான நடவடிக்கைகள், சட்டவிரோத குடியேறிகளை வங்கதேசம் அழைத்துக்கொள்வதில் ஏற்படும் தாமதம் உள்பட எல்லை பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவித்தன.

முன்னதாக, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமுது யூனுஸ் பதவி வகித்தபோது 2025, ஆகஸ்ட் மாதத்தில் அந்நாட்டு தலைநகா் டாக்காவில் இருதரப்பு எல்லை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது சா்வதேச எல்லையில் விதிகளை பின்பற்றவும் கடத்தல், எல்லை கடந்த குற்றங்களை தடுக்க பரஸ்பர ஒத்துழைப்பு அளிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது.

மேற்கு வங்கத்தில் முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின் அங்கு சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து நாடுகடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.