திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!

கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சரவை குறித்து மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தது தொடர்பாக...

News image

மல்லிகார்ஜுன கார்கே - IANS

Updated On :31 மே 2026, 12:24 pm IST

கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சரவை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை பேசியுள்ளார்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து, சித்த ராமையாவை காங்கிரஸ் தலைமை ராஜிநாமா செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அவர் ராஜிநாமா செய்ததால் அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அந்தக் குழுவின் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. முன்மொழிவு வந்த பிறகு, எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும், எத்தனை துணை முதல்வர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படும். இது குறித்த உரயாடல்கள் அனைத்தும் சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் நடைபெற்றன.

இவை அனைத்தும் வரும் ஜூன் 3 ஆம் தேதிக்குப் பிறகுதான் தெரியவரும். இன்னும் 15 நாள்களில் அல்லது ஒரு மாதத்தில், மீதமுள்ள அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க உள்ளோம். ஆனால் முதல்வர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

இயல்பாகவே இவர்களின் ஆட்சிக்காலம் முடிந்த பிறகும் வேறொருவர் வர வேண்டும். இப்போது நமக்கு 24 மாதங்கள் மட்டுமே இருப்பதால், மிக வேகமாகச் செயல்பட்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரை நாங்கள் தேட வேண்டும். அவர்களுடன் ஒத்துழைக்கும் நபர்களும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகே நாங்கள் இது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Summary

Congress leader Mallikarjun Kharge spoke on Sunday regarding Karnataka's new Deputy Chief Ministers and Cabinet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.