மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!

அரசியல் நாகரிகமின்றி பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது

News image

மல்லிகார்ஜுன கார்கே, நயினார் நாகேந்திரன் - எக்ஸ்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:51 pm

அரசியல் நாகரிகமின்றி பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேசிய விடியோவை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதாவது:

’’ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நாடு முழுவதும் தீவிரவாதிகளை எளிதாக ஊடுருவ விட்டதில் தொடங்கி ஜார்ஜ் சோரோஸ் போன்ற அந்நிய நாட்டு சக்திகளிடம் கைகோர்த்து தேசத்தின் பாதுகாப்பைக் களவாட முயற்சித்த காங்கிரஸ் கட்சிக்கு தேசத்தைக் கட்டுக்கோப்பாகக் காத்து, சமத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் தன்னிகரில்லாத் தலைவரைக் கண்டால் எரிச்சல் வருவது இயல்பானது தான்.

ஆனாலும், தேசத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் ஒருவரைக் குறித்து, எந்தவொரு அரசியல் மாண்புமின்றி கொச்சையாகப் பேசும் அளவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி முற்றிவிட்டதா? அல்லது சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி பயம் முற்றிவிட்டதா?

எதுவாயினும், காங்கிரஸ் கட்சியினரின் தரம் கெட்ட பேச்சை ஏற்றுக்கொள்ளமுடியாது. அமைதிக்கான தூதுவர் என உலகமே போற்றும் பெருந்தலைவரைக் குறித்து வாய்க்கூசாமல் அபத்தமான கருத்தை முன்வைத்ததற்கு மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையெனில் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Is Prime Minister Modi a Terrorist Kharge Must Apologize Nayinar nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.