உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்வையிட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் டிஃபானியின் பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிஃபானி டிரம்ப் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு நேற்று (மே 30) வருகைப்புரிந்தார். அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு விமானத்தில் வந்த அவா், அங்கிருந்து தனி விமானத்தில் ஆக்ரா சென்றார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை தனது கணவர் மைக்கேல் பெளலோஸ் உடன் பார்வையிட்டார்.

தாஜ்மஹால் முன்பு டிஃபானி - எக்ஸ்
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுற்றுலா நகரான ஜெய்சால்மருக்குச் சென்றுள்ளார்.
இதனிடையே தாஜ்மஹாலை பார்வையிட்டது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் டிஃபானி பதிவிட்டுள்ளதாவது:
''தாஜ்மஹாலை பார்வையிட்டது மிக அற்புதமான தருணம், என்னவொரு கனவு நனவான தருணம் இது'' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது கணவருடன் தாஜ்மஹால் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
Summary
An incredible visit to the Taj Mahal US president donald trump daughter Tiffany Ariana
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









