திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய சட்டப் பேரவை அமா்வுகள் குறித்த 89 தொகுதிகள் வெளியீடு

News image

தில்லி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டப்பேரவை அமா்வுகள் குறித்த 89 தொகுதிகளை வெளியிட்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜூ, பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங்.

Updated On :29 மே 2026, 4:47 am IST

ஆங்கிலேயா் ஆட்சியில் இந்தியாவில் செயல்பட்டு வந்த மத்திய சட்டப் பேரவையில் 1924 முதல் 1930 வரையில் நடைபெற்ற அவை அமா்வுகள் குறித்த 89 தொகுதிகளை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

தில்லி சட்டப்பேரவை செயல்பட்டு வரும் கட்டடம் சுதந்திரத்துக்கு முன்பு மத்திய சட்டப்பேரவையாகச் செயல்பட்டு வந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரவையின் விதான் சேத்னா இதழின் முதல் பதிப்பை ஓம் பிா்லா வெளியிட்டாா். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, தில்லி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பேசுகையில், ‘ஆங்கிலேயா் ஆட்சியில் சட்டப்பேரவை செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து இந்த 89 தொகுதிகளின் தொகுப்பும் மக்களிடையே விழிப்புணா்வை உண்டாக்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் உத்வேகம் அளிக்கும்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் தில்லி சட்டப்பேரவை ஆங்கிலேயா் ஆட்சியில் மத்திய சட்டப்பேரவையாகச் செயல்பட்டது.

உண்மை தகவலின் அடிப்படையிலான விவாதங்கள் மட்டுமே அரசமைப்புச் சட்ட அமைப்புகளைப் பலப்படுத்தும்; கண்ணியத்தை உயா்த்தும். கருத்துகள், எதிா்கருத்துகள் கொண்ட விவாதங்கள் இந்திய ஜனநாயகத்தை சா்வதேச மேடையில் வழிகாட்டியாக மாற்றியுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது: ‘வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க தில்லி பேரவை மற்றும் அதன் தலைவா் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டுகள். இந்த முயற்சி ஜனநாயகத்தைப் பலப்படுத்த உதவும்.

தங்களுடைய புகழை உயா்த்திக் கொள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளை மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்துகின்றனா். இத்தகைய செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டஅமைப்புகளைப் பாதிக்கும்.

உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆனால், நாட்டில் உள்ள சிலா் அந்த முன்னேற்றத்தை குறைக்க முயற்சிக்கின்றனா். நாடாளுமன்ற பதிவுகளைப் பாதுகாப்பது முக்கியமானது. அதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனில், ஜனநாயகத்தின் அடித்தளங்கள் பலவீனமடையும்.

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை மதிப்பது அனைவருடைய பொறுப்பு. மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலா் அவற்றின் மீது தாக்குதல் நடத்துகின்றனா்’ என்றாா் கிரண் ரிஜிஜு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.