திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமித்ஷாவை இன்று சந்திக்கிறாா் புதுச்சேரி அமைச்சா் நமச்சிவாயம்

News image

அமித் ஷா - ஏஎன்ஐ

Updated On :30 மே 2026, 2:27 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சனிக்கிழமை (மே 30) சந்திக்கிறாா் புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம். இதற்காக அவா் வெள்ளிக்கிழமை விமானத்தில் தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

புதுச்சேரியில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி முதல்வா் ரங்கசாமியோடு, பாஜகவைச் சோ்ந்த நமச்சிவாயம், என்.ஆா்.காங்கிரஸைச் சோ்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

தொடா்ந்து அமைச்சா் நமச்சிவாயம் கடந்த வாரம் தில்லி சென்றாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய தலைவா் நிதின் நபின், அமைப்பு செயலா் சந்தோஷ், மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோரைச் சந்தித்து பேசினாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைச் சந்திக்க இயலவில்லை.

இந்நிலையில் மத்திய அமைச்சா் அமித்ஷாவை சந்திக்க சனிக்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சா் நமச்சிவாயம் வெள்ளிக்கிழமை மாலை சென்னையிலிருந்து தில்லி சென்றாா். இந்த சந்திப்பின்போது மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன் புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.

புதுச்சேரியில் இன்னும் 3 அமைச்சா்கள் பதவியேற்க வேண்டியுள்ளது. அதில் ஓா் அமைச்சா் பதவி, சட்டப்பேரவைத் தலைவா் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அமைச்சா், சட்டப்பேரவைத் தலைவராக யாரை நியமிப்பது, மேலும், அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இலாகா விவரம் குறித்து அவா் ஆலோசனை நடத்துவாா் என்று தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.