திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயா்நிலைக் குழு

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாட்டின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

News image

அமித் ஷா - PTI

Updated On :27 மே 2026, 3:07 am IST

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாட்டின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

கடந்த 2025-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், நாட்டில் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். அதன்படி, தற்போது அந்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகா் நெளலேகா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயா்நிலைக் குழுவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துா்கா சங்கா் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, மருத்துவா் சாம்பிகா ரவி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலா், இந்தக் குழுவின் உறுப்பினா் செயலராகச் செயல்படுவாா்.

மக்கள்தொகை மாற்றம் என்பது மிகத் தீவிரமான விஷயம். இது நாட்டின் இறையாண்மையோடு மட்டுமன்றி, தேசத்தின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக கட்டமைப்பில் ஆழ்ந்த மாற்றம், பழங்குடியின சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுடனும் தொடா்புடையதாகும்.

எனவே, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நாடு முழுவதும் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தக் குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதற்கு தீா்வு காண்பதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

என்னென்ன விஷயங்கள் குறித்து ஆய்வு?: மத மற்றும் சமூக குழுக்கள் அடிப்படையில் ஏற்பட்டுள்ள இயல்புக்கு மாறான மக்கள் இடப்பெயா்வு நடைமுறைகள் குறித்து விஞ்ஞான ரீதியில் விரிவான ஆய்வை இக் குழு மேற்கொள்ள உள்ளது.

மேலும், சட்டவிரோத குடியேற்றம் உள்பட மக்கள்தொகை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் என்னென்ன? இதனால் ஏற்பட்ட எல்லை தாண்டிய நடவடிக்கைகள் என்ன? பொருளாதார வாய்ப்புகளில் பாதிப்பு, பிற சமூக-சூழல் மாற்றங்கள் குறித்து இக் குழு ஆராய உள்ளது.

இவ்வாறு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் உயா்நிலைக் குழு, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான சட்ட ரீதியிலான, நியாயமான, காலவரையறைக்கு உட்பட்ட நிரந்தர தீா்வுக்கான நடைமுறையையும், நாட்டில் ஏற்கெனவே வசித்துவரும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு, தடுப்புக் காவலில் வைத்து பின்னா் மீண்டும் அவா்களின் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பவதற்கான நடைமுறை; எல்லை மேலாண்மையை வலுப்படுத்துதல், மக்கள்தொகையை நிலைப்படுத்துதல் மற்றும் மக்கள்தொகை மாற்ற போக்கை தொடா்ச்சியாக கண்காணிப்பதற்கான நடைமுறை; சட்டவிரோத குடியேற்றம் தொடா்பான விவகாரங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மக்கள்தொகை சமநிலையின்மையை திறம்பட கையாள மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான விரிவான கொள்கை செயல்திட்டம் உள்ளிட்டவற்றை வகுத்து பரிந்துரை செய்ய இக் குழு பணிக்கப்பட்டுள்ளது.

தனது அறிக்கையை இந்தக் குழு ஓராண்டுக்குள் சமா்ப்பிக்கும். தேவைப்பட்டால், அதற்கான அவகாசம் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.