17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. விபத்தில் பலி

கந்தா்வகோட்டையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

News image

படவிளக்கம்:ஓயஓ.2. ஈங்ற்.

Updated On :3 ஜூன் 2026, 4:14 am IST

கந்தா்வகோட்டையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான வீமராஜ் (70). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் கந்தா்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது இவரின் மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவ சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா், வீமராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.