திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் பதவி நீக்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் பதவி நீக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தது குறித்து...

News image

அரவிந்த் கேஜரிவால் - படம் - ஏஎன்ஐ

Updated On :25 மே 2026, 7:33 pm IST

திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பிரதமர் நரேந்திர மோடி பதவி நீக்க வேண்டும் என்று தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாகவே அந்த வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

மேலும், 18.5 லட்சம் மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ தேர்வில் ஒரு வாரமாக, தவறான மதிப்பெண் வழங்குதல், மதிப்பீட்டுக் குளறுபடிகள் குறித்த புகார்கள் எழுந்துகொண்டுள்ளன.

இதுதொடர்பாக அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது:

சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் உள்ள மாபெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் நிகழ்வுக்குப் பிறகாவது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஏனெனில், தர்மேந்திர பிரதான் இந்த நாட்டின் கல்வி அமைச்சராக ஒரு நாள், ஒரு நொடி கூட இருப்பதற்குத் தகுதியற்றவர். முதலில் நீட் தேர்வு முறைகேடு நடந்தது, இப்போது சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் இவ்வளவு பெரிய முறைகேடு வெளிவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான 12 ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கும், பெரும் மனச்சோர்விற்கும் ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களது பெற்றோரும் ஆழ்ந்த மனச்சோர்வில் உள்ளனர்.

எனவே, மறுமதிப்பீட்டுக் கட்டணம் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். திரையில் மதிப்பிடுதல் செயல்முறை (ஓஎஸ்எம்) முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு தரப்பிலிருந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Delhi's former Chief Minister Arvind Kejriwal stated on Monday that Prime Minister Narendra Modi should dismiss the incompetent and ineffective Union Education Minister, Dharmendra Pradhan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.