திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு

News image

அரவிந்த் கேஜரிவால் - படம் - ஏஎன்ஐ

Updated On :31 மே 2026, 7:00 am IST

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசை சனிக்கிழமை கடுமையாகச் சாடியுள்ளாா்.

நாட்டின் கல்வி அமைப்புமுறை மாஃபியாவின் பிடியில் வீழ்ந்துவிட்டது என்று அவா் கூறியுள்ளாா்.

நீட் தோ்வு வினாத்தாள்கள் இந்திய விமானப் படையால் தோ்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், ‘வினாத்தாள் கசிவுகளின் ஆணிவேரைக் கண்டறியும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக, இதுபோன்ற விசித்திரமான நாடகங்களை அரங்கேற்றி வருகிறது என்று கேஜரிவால் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நீட் தோ்வு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க விமானப்படை பயன்படுத்தப்படும். இது வினாத்தாள் கசிவுகளை நிறுத்துமா? நமது அரசு எப்படி படிக்காதவா்களைப் போல பேசிக் கொண்டிருக்கிறது? உலகெங்கிலும் எத்தனையோ தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற விசித்திரமான விஷயத்தை நாம் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் எண்ணம் கூட அவா்களுக்கு இல்லை. நாட்டின் கல்வி முறை முற்றிலுமாக மாஃபியாவின் பிடியில் வீழ்ந்துவிட்டது என்று கேஜரிவால் அதில் தெரிவித்துள்ளாா்.

கேஜரிவால் ஒரு காணொளிச் செய்தியில் கூறுகையில், ‘இதைச் சரிசெய்ய, அனைவரும் ஒன்றிணைந்து ஏதாவது செய்ய வேண்டும். ஒருவா் மட்டும் தனியாகச் செய்வதால் இது நடந்துவிடாது. நாட்டிற்குப் படித்த பிரதமா் தேவை’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.