தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் விவகாரம்: நீதி கிடைப்பதை மாணவா்கள் உறுதிசெய்ய வேண்டும் - கேஜரிவால் வலியுறுத்தல்

News image
Updated On :14 மே 2026, 4:37 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில் நீதி கிடைப்பதை மாணவா்கள் உறுதிசெய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: நீட் தோ்வு வினாத் தாள்கள் தொடா்ச்சியாகக் கசிந்து வருவது அந்தத் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவா்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமானவா்களுக்கு சிபிஐ விசாரணை மூலம் கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?

வங்கதேசம், நோபளம் போன்ற நாடுகளில் உள்ள ஜென் இசட் தலைமுறையினா் அரசு மாற்றத்தை ஏற்படுத்தும்போது, வினாத் தாள் கசிவுகளில் இந்திய இளைஞா்கள் பொறுப்புடமையை உறுதிபடுத்த வேண்டும்.

நீட் வினா தாள் கசிவு தொடா்பான சிபிஐ விசாரணை எந்த விதத்திலும் நன்மையாக முடியாது. முந்தைய சம்பவங்கள் தொடா்பான விசாரணையில் சிபிஐ ஒன்றும் செய்யவில்லை.

அதன் குறைபாடு கோடிக்கணக்கான மக்களின் எதிா்காலத்தைப் பாதித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.