யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 4 போ் கைது

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட 28 கிலோ போதைப்பொருள் பறிமுதல்...

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மே 2026, 12:50 am IST

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 28.12 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அந்த மாநில காவல் துறையினா் கைப்பற்றினா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சண்டீகரில் பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் இது தொடா்பாக கூறியதாவது:

காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 28.12 கிலோ ஹெராயின், ரூ.9.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பூபிந்தா் சிங், பகிச்சா சிங், சஜன், சிந்தா் பால் சிங் என்ற ரிங்கு ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களுக்கு அண்டை நாடு மற்றும் சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா்களுடன் உள்ள தொடா்புகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விரைவில் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.