இனப்படுகொலை சம்பவங்களில் பாகிஸ்தான் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுத மோதல்களில் பொதுமக்களை பாதுகாத்தல் குறித்த தலைப்பில் ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரீஷ் பர்வதேனேனி பேசியதாவது, இனப்படுகொலை சம்பவங்களில் நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. அமைப்பு ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய எல்லைதாண்டிய வன்முறையால், ஆப்கானிஸ்தானில் பொதுமக்களில் 750 பேர் பலியானதாகத் தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலும் வான்வழித் தாக்குதலாலே நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழக்கக் காரணமான 95 சம்பவங்களில் 94 சம்பவங்கள் பாகிஸ்தானால் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதமான ரமலான் மாதத்தில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல், எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயலே. இந்தத் தாக்குதலில் 269 பேர் பலியானதுடன், 122 பேர் காயமடைந்தனர்.
தொழுகை முடித்து மசூதியிலிருந்து திரும்பியவர்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இத்தகைய கொடூரமான செயல்கள் ஒருபோதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
ஏனெனில், தன் சொந்த மக்கள் மீதே குண்டுவீசி, திட்டமிட்ட இனப்படுகொலை செய்யும் ஒரு நாடுதான் பாகிஸ்தான் என்று தெரிவித்தார்.
Summary
India Slams Pakistan at UNSC Over Civilian Attacks in Afghanistan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்!

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

15.5.1976: மீண்டும் இந்தியா-பாக். தூதர் உறவு ஏற்படும்
இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டனர்: டிரம்ப்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


