மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டனர்: டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் கூறியதைப் பற்றி...

News image

டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:32 pm IST

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அரசின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, "நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.

இந்தியாவைப் பொருத்தவரையில், நான் 3 கோடி முதல் 5 கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார். ஆனால், எண்ணிக்கை அவர் கூறுவதைவிட அதிகமாக இருந்திருக்கலாம்.

இரண்டு அணுசக்தி நாடுகள் மோதிக் கொண்டிருந்தன. 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால், நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், உங்கள் மீது வரியை விதிப்பேன் என்று நான் கூறினேன்.

‘ஐயோ, தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள்,’ என்று அவர்கள் சொன்னார்கள். வரிகளை விதித்து சண்டையைத் தீர்த்து வைத்தேன்" என்று தெரிவித்தார்.

2025 ஏப்ரலில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதனையடுத்து, 2025 மே மாதத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையேயான போரை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியதால், இந்தியா போரை நிறுத்திக் கொண்டது.

இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறினார். இந்தியா போர் குறித்த டிரம்ப்பின் பேச்சுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

இருப்பினும், போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக இதுவரையில் 80-க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் கூறிவிட்டார்.

Summary

US President Donald Trump once again claims he stopped India - Pakistan tensions with tariff threat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.